×

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு

 

ஈரோடு, டிச.3: சித்தோடு, நசியனூர் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார். ஈரோடு புதிய கலெக்டராக பதவியேற்றபின் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இதேபோல், கலெக்டர் அலுவலகத்தில் துறைவாரியாக மேற் கொ ள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரோடு அடுத்துள்ள சித்தோடு, நசியனூர் மற்றும் காஞ்சிக்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்து டாக்டர்கள், செவிலியர்கள் பணிக்கு வந்துள்ளார்களா என்பது குறித்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் விபரம், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்கள் குறித்தும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தார்.

The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் நள்ளிரவில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Erode ,Chithod ,Nasianur ,Dinakaran ,
× RELATED பட்டுக்கூடு வரத்து சரிந்தது