×

நாகார்ஜூன சாகர் அணை மதகுகளை திறப்பதற்கு ஆந்திரா, தெலங்கானா அதிகாரிகள் இடையே மோதல்:ஆயிரம் போலீசார் குவிந்ததால் பரபரப்பு

திருமலை: தெலங்கானாவில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக நாகர்ஜூன சாகர் அணை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு காரணம் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாகர்ஜூன சாகர் அணை தெலங்கானா- ஆந்திரா இரு மாநில எல்லையில் உள்ளது. இந்த நாகர்ஜூன சாகர் அணை குறித்த பிரச்னைக்கு தீர்வு காண கோதாவரி நதிநீர் தீர்ப்பாயம் உள்ளது. இந்த அணையில் மொத்தம் 29 மதகுகள் உள்ளன. இதில் 1 முதல் 13 மதகுகள் தெலங்கானாவுக்கும், 14 முதல் 29 வரையிலான மதகுகள் ஆந்திராவுக்கும் சொந்தமானவை. நாகர்ஜூன சாகர் அணை திறப்பு என்பது கோதாவரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாகர்ஜூன சாகர் அணையில் இருந்து 2,000 கன அடிநீரை குடிநீர் பயன்பாட்டுக்காக திறக்க ஆந்திரா அரசு முடிவு செய்தது. இதற்காக நாகர்ஜூன சாகர் அணைக்கு ஆந்திரா அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் வந்தனர். ஆனால் நாகர்ஜூன சாகர் அணை நிர்வாகம், பராமரிப்பு மொத்தம் தெலங்கானா அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஆந்திராவுக்கு சொந்தமான மதகுகளில் இருந்து ஆயிரம் அடி தண்ணீரை திறப்பதற்கு முயற்சி செய்தனர். இதற்கு தெலங்கானா அரசு எதிர்ப்பு தெரிவித்து அணை மதகுகளை திறப்பதை தடுத்து, தடுப்பு வேலி அமைத்து கட்டுப்பாட்டு அறையையும் பூட்டிவிட்டனர்.

இதனால் கொந்தளித்த ஆந்திரா அதிகாரிகள் 1,000க்கும் மேற்பட்ட போலீசாரை அங்கு குவித்தனர். இதையடுத்து தெலங்கானா போலீசார் அமைத்திருந்த சிசி கேமராவை உடைத்து தடுப்பு வேலியை அகற்றி தங்களுக்கு உரிய மதகுகளில் அணை நீரை திறந்து விட்டனர். இதனை எதிர்பார்க்காத தெலங்கானா அதிகாரிகள் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதற்கு பதிலடியாக புதிய மோட்டார்களை கொண்டு வந்து தங்களது எல்லைப் பகுதி மின்சாரம் மூலமாக இயக்கினர். இதனால் அணை பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

The post நாகார்ஜூன சாகர் அணை மதகுகளை திறப்பதற்கு ஆந்திரா, தெலங்கானா அதிகாரிகள் இடையே மோதல்:ஆயிரம் போலீசார் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra ,Nagarjuna Sagar ,Tirumala ,Nagarjuna Sagar Dam ,Telangana ,Dam ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...