×

புதுவையில் 3 நாளில் 25 பேரை கடித்து குதறிய நாய்கள்

புதுச்சேரி, நவ. 30: புதுவையில் கடந்த 3 நாட்களில் 25 பேரை தெருநாய் கடித்து குதறியுள்ளது. புதுச்சேரியில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் பணி முடித்து செல்வோர், தெருநாய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே ரெட்டியார்பாளையம், மூலகுளம் பகுதிகளில் நேற்று முன்தினம் தெருநாய்கள் கடித்து 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டு சிகிச்சை பெற்று, வீடுகளுக்கு திரும்பினர். இதனிடையே லாஸ்பேட்டை, குறிஞ்சிநகர், 10வது குறுக்குத் தெருவில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நேற்று சுற்றித்திரிந்த வெறிநாய் அவ்வழியாக சென்ற மாணவர்கள், பொதுமக்கள் என அடுத்தடுத்து 7 பேரை கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதேபோல் மேலும் சில இடங்களில் தெருநாய்கள் கடித்து காயமடைந்த பொதுமக்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 25க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளது. சமீபகாலமாக தெருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post புதுவையில் 3 நாளில் 25 பேரை கடித்து குதறிய நாய்கள் appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Puduwai ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் புதுவை தொகுதி வேட்பாளரை பாஜ விரைவில் அறிவிக்கும்