ஸ்பிக்நகர், நவ. 29: தூத்துக்குடி அனல்மின் நகர் பகுதியைச் சேர்ந்த லிங்கத்துரை (59), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர், முத்தையாபுரம் அய்யங்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரிடம் ரூ.2,10,000 கடனாக பெற்றுள்ளார். இதற்கு கடந்த 7 மாதங்களாக கூடுதல் வட்டி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி பிரதீப், சக்திவேல் என்பவருடன் சேர்ந்து லிங்கத்துரையை காரில் கடத்தி தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பிரதீப், சக்திவேலை கைது செய்தனர்.
The post தெர்மல்நகர் அருகே மின்வாரிய ஊழியரை காரில் கடத்தி தாக்குதல் 2 பேர் கைது appeared first on Dinakaran.