×

தேனி என்.எஸ் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேனி, நவ. 29: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர்கள் காசிபிரபு, இணை செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி துணை முதல்வர்கள் கோமதி, சுசிலாசங்கர், சரண்யா வாழ்த்தி பேசினர்.

கருத்தரங்கில் அல்லிநகரம் எஸ்ஐ பாண்டியம்மாள் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு அடிமையானர்வகள் குறித்தும், இதனால் ஏற்படும் மனரீதியான பாதிப்புகள், உணர்வு ரீதியான பாதிப்புகள், சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுதல், உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவது குறித்து விளக்கி பேசினார். இதில் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் நாகப்பிரியா நன்றி கூறினார்.கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செஞ்சுருள் திட்ட அலுவலர் ராமுத்தாய் செய்தார்.

The post தேனி என்.எஸ் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Drug Awareness Seminar ,NS College ,Theni ,Centurul Sangam ,Theni Nadar Saraswati Arts and Science College ,Vadabudhupatti ,Theni NS College ,Dinakaran ,
× RELATED பார்வை மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்