×

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது சென்னை பஸ் மோதி 2 பேர் பலி:5 பேர் படுகாயம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது ஆம்னி பஸ் மோதி 2 பேர் இறந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற இந்த பஸ்சில் லத்தீஷ்(37) என்பவர் டிரைவராக இருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த ஆம்னி பஸ் வந்த போது, முன்னால் சென்றுகொண்டிருந்த திருச்சிக்கு ரயில்வே தண்டவாளங்கள் ஏற்றிச்சென்ற லாரி ட்ரெய்லரின் பின்பகுதியில் பஸ் மோதியது.

இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே பஸ்சில் பயணித்த கன்னியாகுமரியை சேர்ந்த பால்ராஜ் மகன் பிரதீஷ்(30) பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயமடைந்த விருதுநகர் அந்தோணிராஜ் (51), மதுராந்தகம் ஞானராஜ்(30), திருநெல்வேலி இசக்கியம்மாள்(55), லட்சுமி, ஜோதி, விஜயலட்சுமி(50) ஆகிய 6 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அந்தோணிராஜ் அங்கு இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை லாரி மீது சென்னை பஸ் மோதி 2 பேர் பலி:5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perambalur ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...