×

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு அறுசுவை உணவு

 

உடுமலை, நவ.28: காரத்தொழவு திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி திமுக கொடியேற்றியும் மதியம் காரத்தொழவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் முபாரக் அலி தலைமையில், ஒன்றிய அவை தலைவர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஷாகுல் அமீது கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.

பின்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, இனிப்பு, அறுசுவை உணவு காரத்தொழவு திமுக சார்பில் வழங்கப்பட்டது. இதில் கிளை கழக நிர்வாகிகள் ஜான்சாஅலி, கிருஷ்ணசாமி, வளர்மதி, ஷோபனா, ராதா, பாண்டியன், அழகிரிசாமி, பழனிச்சாமி, ஜெயக்குமார், காளிமுத்து, பொன்னழகன், ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு அறுசுவை உணவு appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Udumalai ,Karatozhavu DMK ,DMK ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...