×

தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய சரக்கு வேன் கிரேன் மூலம் மீட்பு

விழுப்புரம், நவ. 26: விழுப்புரம் அருகே தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய சரக்கு வேன் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தென்பெண்ணை, மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் சில வாகன ஓட்டிகள் அறிவிப்பை மீறி சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து முந்திரிக்கொட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வேன் ஒன்று நேற்று விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கண்டரக்கோட்டையை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்தார். விழுப்புரத்திற்கு பில்லூர் வழியாக, அங்கு பாய்ந்தோடும் மலட்டாற்று தரைப்பாலத்தில் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தரைபாலத்தில் வேன் சிக்கிகொண்டது. தொடர்ந்து ஆற்றில் இறநங்கியது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிவாவை மீட்டனர். தனவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையை போலீசார் வந்து, மினி வேனை கிரேன் மூலம் மீட்டனர். மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம், தரைபாலத்தை கடக்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி விட்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய சரக்கு வேன் கிரேன் மூலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Cargo ,Villupuram ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்புகள்...