×

திருவெண்ணெய்நல்லூரில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் ₹5 லட்சம் நகை, பணம் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர், நவ. 26: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அணைக்கட்டு சாலை 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சிவாச்சாரன்(40). இவர் விழுப்புரத்தில் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளராக உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி சூரியா, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில், சிவாச்சாரன் பணியை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோ உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். இது குறித்து சிவாச்சாரன், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவெண்ணெய்நல்லூரில் நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் ₹5 லட்சம் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,Sivacharan ,Thiruvenneynallur Dam Road 3rd Cross Street, Villupuram District ,Villupuram ,
× RELATED குடிநீர் கிணற்றில் இறந்து கிடந்த நாகப் பாம்பு