×

ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை, நவ. 26: சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் முன் பக்க டயர் வெடித்தது. இதில் பேருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த திருநாவலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற நெடுஞ்சாலை பராமரிப்பு குழுவினர், விபத்துக்குள்ளான பேருந்தை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

The post ஆம்னி பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Chennai ,Madurai ,Dinakaran ,
× RELATED செங்குறிச்சி கிராமத்தில் புதியதாக...