×

டிசம்பர் 17ல் சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு 6000 இளைஞர்கள் செல்ல வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

 

நாகப்பட்டினம்,செப்.26: சேலத்தில் டிசம்பர் 17ல் நடக்கும் இளைஞர் அணி மாநாட்டிற்கு 6000 இளைஞர்கள் செல்ல வேண்டும் என்று மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசன், ராஜேந்திரன், மேகநாதன், மாவட்ட பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார்.

கூட்டத்தின் நோக்கம் குறித்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் பேசினார். கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தலைமை கழகத்தால் கொடுக்கப்பட்ட பணிகளை அனைவரும் உடன் செய்திட வேண்டும். டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டிற்கு நாகை மாவட்டத்தில் இருந்து 6000த்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நாளை (27ம் தேதி) பிறந்த நாள் காணும் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துணை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை நாகை மாவட்ட முழுவது நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கொடி ஏற்றியும் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் ஜெகவீரப்பாண்டியன், துணைச் செயலாளர் போஸ், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post டிசம்பர் 17ல் சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு 6000 இளைஞர்கள் செல்ல வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Salem youth conference ,DMK ,Nagapattinam ,Salem Youth League Conference ,
× RELATED நாகப்பட்டினத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்வைப்பு