- மாவட்ட கவுன்சிலர்
- நிஜல்குடை
- பட்டுலிங்கம்பட்டி
- காயதரு
- கயத்தூர்
- பிரியா குருராஜ்
- பட்டுலிங்கம்பட்டி
- கயத்தாறில்
- தின மலர்
கயத்தாறு, நவ. 25: கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டியில் ₹4.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டினார். கயத்தாறு யூனியனுக்குட்பட்ட காப்புலிங்கம்பட்டி கிராம மக்கள், தங்கள் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென விடுத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், தனது மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ₹4.5 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் காப்புலிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சங்கிலி மாடத்தி, துணை தலைவர் தங்கத்தாய், திமுக பிரதிநிதி கருப்பசாமி, காங். ஒன்றிய தலைவர் செல்லத்துரை, காப்புலிங்கம்பட்டி திமுக கிளை செயலாளர் சங்கிலிப்பாண்டி, ஊர் நாட்டாமை கிருஷ்ணசாமி, ஊராட்சி செயலர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியில் ₹4.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை மாவட்ட கவுன்சிலர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.