×

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்மழைக்கு 16 வீடுகள் சேதம்

 

தஞ்சாவூர், நவ.25: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 16 வீடுகள் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்றுமுன்தினம் தஞ்சாவூர், குருங்குளம், திருவையாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பகல் நேரத்தில் மழை இல்லை. இருந்தாலும் இரவில் மீண்டும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் 11 கூரை வீடுகள், 5 ஓட்டு வீடுகள் என மொத்தம் 16 வீடுகள் பகுதி அளவில் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பெய்த மழையளவு; தஞ்சாவூர் மாநகரில் 9.50 மிமீ, குருங்குளத்தில் 3, பூதலூரில் 2.60, திருக்காட்டுபள்ளியில் 4.80, கல்லணையில் 3.20, அதிராம்பட்டினம் 9.20, ஒரத்தநாடு 9, திருவையாறு 7, வெட்டிக்காட்டில் 2, கும்பகோணத்தில் 3, பாபநாசத்தில் 3, மஞ்சளாறில் 3.20, பட்டுக்கோட்டையில் 5, அதிராம்பட்டினத்தில் 9.20, ஈச்சன் விடுதியில் 3, மதுக்கூரில் 1.20, பேராவூரணியில் இரண்டு என மொத்தமாக மாவட்ட முழுவதும் 74.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் சராசரியாக 3.56 செ. மீ. மழை பதிவாகியுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்மழைக்கு 16 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூரில் வாழை இலை விலை திடீர் உயர்வு