×

திடீர் ஆய்வில் சிக்கினர் நீங்க ஸ்கூலுக்கு லேட்டா வரலாமா? ஹெச்.எம், ஆசிரியை இடமாற்றம்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கலெக்டர் ஆய்வுக்கு சென்றபோது ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு அவரே பாடம் நடத்தினார். சரியான நேரத்தில் பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர், ஆசிரியர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மறுசீரமைப்பு தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பழனி பங்கேற்றுவிட்டு விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு திரும்பினார்.

வரும் வழியில் கோவிந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறைக்கு சென்று அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட காலை உணவை பரிசோதித்தார். பின்னர் அருகில் இருந்த தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு 27 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி துவங்கும் நேரமாகியும் தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி மற்றும் ஆசிரியை மாலதி ஆகியோர் பணிக்கு வரவில்லை. இல்லை.

இதனால் கலெக்டர் மாணவர்களிடம் நடத்தப்பட்ட பாடங்கள் குறித்தும், மனப்பாட பகுதிகளை ஒப்புவிக்க சொல்லி கேட்டார். மேலும், மாணவர்களுக்கு பாடமும் நடத்தினார். தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு சரியான நேரத்தில் பள்ளிக்கு வராத ஆசிரியைகள் 2 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி சம்மந்தப்பட்ட ஆசிரியைகள் வேறு பள்ளிக்கு தற்காலிகமாக பணிமாற்றப்பட்ட செய்யப்பட்டனர். மேலும், அவர்களை சஸ்பெண்ட் செய்யவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post திடீர் ஆய்வில் சிக்கினர் நீங்க ஸ்கூலுக்கு லேட்டா வரலாமா? ஹெச்.எம், ஆசிரியை இடமாற்றம்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Vilupuram ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு