×

பண்ருட்டியில் பரபரப்பு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சி

பண்ருட்டி, நவ. 24: பண்ருட்டியை சேர்ந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன். இவர் கடலூர் மேற்கு மாவட்ட திமுக அவை தலைவராக பதவி வகித்து வருகிறார். பண்ருட்டி-கடலூர் சாலையில் இவருக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இவர் நேற்றுமுன்தினம் இரவு மருத்துவமனையில் பணி முடிந்து வீடு திரும்பினார். பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள காமராஜர் நகரில் இவரது வீடு உள்ளது. இவரது மருமகனும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அவை தலைவருமான டாக்டர் நவீன் பிரதாப் வீடும் அதே பகுதியில் அருகருகே உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம ஆசாமிகள் 2 பேர், வீட்டில் முன்பக்கம் மதில் சுவரில் எகிறி குதித்து மாடி வழியே உள்ளே புகுந்துள்ளனர்.

அப்போது அந்த அப்பார்ட்மெண்டில் மூன்றாவது மாடியில் நடை பயிற்சியில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு கீழே ஓடி வந்துள்ளனர் அங்கு மாடியில் நடந்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிடிபட்ட 2 பேரையும் பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின்
பேரில் நடந்த விசாரணையில், பண்ருட்டியை அடுத்த எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(22), நந்தபிரவின் (27) என தெரியவந்தது. இவர்கள் அங்கு கார், பைக் ஆகியவற்றை திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பண்ருட்டியில் பரபரப்பு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : MLA ,Panrutti ,Panruti ,Dr. ,Nanthagopalakrishnan ,Cuddalore West District ,DMK ,-MLA ,Dinakaran ,
× RELATED பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ...