×

மனைவி மாயம்: கணவர் புகார்

சிதம்பரம், நவ. 24: சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் மோக்கேஷ்ராஜ்(27). இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சந்தியா(23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து ஐந்தாண்டு ஆகிறது, குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 20ம் தேதி நாலரை பவுன் தங்க செயின் மற்றும் டிசி, மார்க் லிஸ்ட் உள்ளிட்டவைகளை எடுத்து கொண்டு தன்னுடைய மனைவி சந்தியா வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை, என சிதம்பரம் நகர போலீசில் மோக்கேஷ்ராஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி மாயம்: கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Mokeshraj ,Gnanasambandam ,Mannargudi Street, Chidambaram ,Mayam ,
× RELATED டிஜிட்டல் பொருளாதாரம் பற்றி விளக்கம்...