×

திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் சஸ்பெண்ட்

சென்னை: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்ட அறிக்கை: கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : DMK Policy Propagation ,Deputy Secretary ,Kudiatham Kumaran ,CHENNAI ,general secretary ,Duraimurugan ,DMK ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்