×

பணிஓய்வு நாளில் நினைவு கூர்ந்தார் துன்புறுத்தும் தீய நோக்கத்துடன் பணியிட மாற்றம்: அலகாபாத் தலைமை நீதிபதி வேதனை

பிரயாக்ராஜ்: தன்னை துன்புறுத்தும் தீய நோக்கத்துடனே பணியிட மாற்றம் வழங்கப்பட்டதாக அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிரிதின்கர் திவாகர் நேற்று முன்தினம் பணிஓய்வு பெற்றார். அப்போது நடந்த பிரிவு உபசார விழாவில் பேசிய அவர், “கடந்த 2018ம் ஆண்டு சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் இருந்து தன்னை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தன்னை துன்புறுத்தும் தீய நோக்கத்துடன் மட்டுமே பணியிடமாற்றம் செய்தார். எந்த காரணத்திற்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டேன் என்பது இதுவரை தெரியாது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2018 அக்டோபரில் பணியை தொடங்கினேன். ஆனால் இங்கு எனது சக நீதிபதிகள், வழக்கறிஞர்களிடம் இருந்து அளவிட முடியாத ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைத்தது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் வகையில், தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கொலிஜியத்தின் மூலம் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்க பரிந்துரைத்தார்,” என்று நினைவு கூர்ந்தார்.

The post பணிஓய்வு நாளில் நினைவு கூர்ந்தார் துன்புறுத்தும் தீய நோக்கத்துடன் பணியிட மாற்றம்: அலகாபாத் தலைமை நீதிபதி வேதனை appeared first on Dinakaran.

Tags : Allahabad ,Chief Justice ,Anguish ,Prayagraj ,Allahabad High Court ,Allahabad… ,Angam ,Dinakaran ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உறுதி