×

மகேந்திரபள்ளி கிராமத்தில் வாய்க்காலில் நாகப்பட்டினத்தில் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்,நவ.22: சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய கோரி போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்கை திரும்ப பெற கோரி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கங்களின் மாநில துணை செயலாளர் தர், மாவட்ட செயலாளர் கமல்ராம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சை மண்டல பொறுப்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட கோரி போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.

தானியார் பெரு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அனைத்து நிலம் எடுப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாளும் போலீசார் வன்மையாக கண்டிப்பது ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் விஜயராஜ், இயற்கை விவசாயி சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மகேந்திரபள்ளி கிராமத்தில் வாய்க்காலில் நாகப்பட்டினத்தில் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Waikal ,Mahendrapalli ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த...