×

மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

 

திருப்பூர், நவ.22: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும், சிறப்பு பயிற்றுநர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா, கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர்.

இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 14 ஒன்றிய வட்டார வள மையங்களில் பணியாற்றும் 54 சிறப்பு பயிற்றுநர்கள் பங்கேற்றனர். பயிற்சியில் மாநில அளவில் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற உடுமலைப்பேட்டை ஒன்றிய சிறப்பு பயிற்றுநர் காளிமுத்து, ஊத்துக்குளி ஒன்றிய சிறப்பு பயிற்றுநர் ராஜா மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய சிறப்பு பயிற்றுநர் செந்தில்குமார் ஆகியோர் 54 சிறப்பு பயிற்றுநர்களுக்கு பயிற்சி வழங்கினர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் பயிற்சியில் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு பயிற்றுநர்களால் கற்பிக்கப்பட உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 2,324 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயன் பெறுவர். இப்பயி்ற்சி நாளை (23ம் தேதி) வரை நடைபெற உள்ளது.

The post மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்