×

பாகிஸ்தான் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்கள்

கராச்சி: உலக கோப்பை தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அஸம், பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னி மார்கெல் ஆகியோர் பதவி விலகினர். இந்நிலையில் ஆஸி.க்கு எதிரான தொடருக்காக அணிகளை தேர்வு செய்ய, தேர்வுக் குழு தலைவராக முன்னாள் வேகம் வகாப் ரியாஸ் நியமிக்கப்பட்டார். டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத், டி20 அணிக்கு ஷாகீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டனர். ஒருநாள் அணிக்கு இன்னும் கேப்டன் நியமிக்கப்படவில்லை.

தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கு (தென் ஆப்ரிக்கா) பதிலாக முகமது ஹபீஸ் கடந்த வாரமே நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்கள் உமர் குல் (வேகம்), சயீத் அஜ்மல் (சுழல்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். டிச.14ம் தேதி முதல் தொடங்கும் ஆஸி. சுற்றுப் பயணத்தில் விளையாட உள்ள டெஸ்ட், டி20 அணிகளுக்கு விரைவில் பயிற்சி முகாம் தொடங்க உள்ளது. அதில் முகமது ஹபீசுடன் இணைந்து உமர், சயீத் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

The post பாகிஸ்தான் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Karachi ,World Cup ,Pakistan Cricket Team Selection Committee ,Inzamam-ul-Haq ,Pakistan ,Dinakaran ,
× RELATED யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய...