×

மன்சூர்அலிகான் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் ரோஜா வலியுறுத்தல்

திருமலை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரோஜா வலியுறுத்தி உள்ளார்.

ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரான நடிகை ரோஜா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
நடிகர் மன்சூர்அலிகான் போன்றவர்கள் பேசும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். திரிஷா, குஷ்பு மற்றும் என்னை பற்றி தவறாக பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ, மன்சூர்அலிகான் போன்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதுபோன்றவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பயப்படாமல் பேசுவார்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

The post மன்சூர்அலிகான் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் ரோஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mansoor Ali Khan ,Minister ,Roja ,Tirumala ,Trisha ,Dinakaran ,
× RELATED கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக...