- பிரையன்ட் பார்க்
- செட்டியார் பார்க்
- ரோஜா பூங்கா
- கொடைக்கானல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ரோஜா பூங்கா
- தின மலர்
திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை தருகின்றனர். ஏரிகள், அருவிகள், வியூ பாயிண்ட்க்கள், மலர் பூங்கா, தாவரவியல் பூங்கா கிராமப் பகுதிகள் என சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலாத் தலங்கள் நிறைந்துள்ளது.
அந்த வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா பிரசித்தி பெற்றது. கொடைக்கானல் ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த பூங்காவில் கோடை காலத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்வர். இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவில் நுழைவு கட்டணம் அதிகரித்துள்ளது.
பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.30-ஆக இருந்த நுழைவுக் கட்டணம் ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் சிறியவர்களுக்கு ரூ.15-ஆக இருந்த நுழைவுக் கட்டணம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. செட்டியார் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. செட்டியார் பூங்காவில் சிறியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது.
The post கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு..!! appeared first on Dinakaran.