×

புவியின் சராசரி வெப்பநிலை முதல்முறையாக 2 டிகிரி செல்ஷியஸை கடந்தது : விஞ்ஞானிகள் கவலை

டெல்லி : புவியின் சராசரி வெப்பநிலை முதல்முறையாக 2 டிகிரி செல்ஷியஸை கடந்து இருப்பது விஞ்ஞானிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. புவியின் சராசரி வெப்பநிலை அளவை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு உயரவிடாமல் தடுப்பதற்காக பாரீஸ் உடன்படுக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டன. ஏற்கனவே அதிக வெப்பத்தால் தகித்துக் கொண்டு இருக்கும் பூமி, 2027ம் ஆண்டுக்குள் ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பை கடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் புவியின் சராசரி வெப்பநிலை தற்காலிகமாக 2 டிகிரி செல்ஷியஸ்-ஐ தொட்டுவிட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. பசுமையில்லா வாயு உமிழ்வுகள், எல்நினோ போன்ற காலநிலை மாறுபாடுகள் காரணமாக வெப்பநிலை உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

The post புவியின் சராசரி வெப்பநிலை முதல்முறையாக 2 டிகிரி செல்ஷியஸை கடந்தது : விஞ்ஞானிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Earth ,Delhi ,Earth's… ,
× RELATED பாங்காக் அருகே ஓடும் ரயில் மீது கிரேன்...