×

விருத்தாசலத்தில் ஒடிசா வாலிபர் சாவு

 

விருத்தாசலம், நவ. 20: ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் தாலுகா, சாஸ்மால் தொய்யால கிராமத்தைச் சேர்ந்தவர் சஸ்வநாத் மகன் சஞ்சய்தாஸ்மால்(48). இவர் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் உள்ள வெள்ளை மண் அரைக்கும் தனியார் கம்பெனி ஒன்றில் கடந்த 8 மாதமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் மண் அரைக்கும் புகை உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் கடந்த இரண்டு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிந்த உடன் வேலை செய்த நண்பர்கள், அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விருத்தாசலத்தில் ஒடிசா வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Saswanath ,Sanjaidasmal ,Sasmal Toyala village ,Baleshwar taluk, Odisha ,Vriddhachalam ,
× RELATED சலூன் கடைக்காரர் தீக்குளித்து சாவு