×

தேசிய கலாஉத்சவ் போட்டிக்கு கோவை அரசு பள்ளி மாணவர் இருவர் தேர்வு

 

கோவை, நவ. 20: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கலைத்திறனை வெளிகொண்டு வரும் வகையில், பள்ளி, யூனியன், மாவட்ட மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பள்ளி, யூனியன், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்கள் கடந்த வாரம் சேலத்தில் நடந்த மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 9 பேர் பரிசுகளை வென்றுள்ளனர். இவர்களில், 2 பேர் முதல் பரிசை பெற்று தேசிய அளவில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, தீத்திபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சுதர்ஷனா கரகாட்டத்திலும், ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் ஹரிஸ் மோன ஆக்டிங் போட்டியிலும் வெற்றி பெற்று டெல்லியில் ஜனவரி மாதம் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post தேசிய கலாஉத்சவ் போட்டிக்கு கோவை அரசு பள்ளி மாணவர் இருவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Government School ,National Kala Utsav competition ,Coimbatore ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்