×

அகமதாபாத் மைதானத்தில் இறுதிப்போட்டியை ரசித்த உதயநிதி

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை காண, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனி விமானத்தில் அகமதாபாத் சென்றார். 13வது உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள, உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்தது.

பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியை பார்ப்பதற்காக, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று அகமதாபாத் புறப்பட்டு சென்றார். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது நண்பர்கள் 6 பேர் சென்றனர்.

The post அகமதாபாத் மைதானத்தில் இறுதிப்போட்டியை ரசித்த உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi ,Ahmedabad ,CHENNAI ,Minister ,Udayanidhi Stalin ,World Cup cricket ,Udayanidhi ,Ahmedabad Stadium ,Dinakaran ,
× RELATED விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை...