×

கறம்பக்குடி அருகே மோகனூரில் இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

 

கறம்பக்குடி, நவ.19: கறம்பக்குடி அருகே கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மோகனூர் இல்லம் தேடி கல்வி மையத்தில் தினமும் வரக்கூடிய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தன்னார்வலர் பிரபா வரவேற்றார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கலந்து கொண்டு பேசுகையில்,  இல்லம் தேடி கல்வி மையம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சிறப்பாக செயல்படுத்தி வரும் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளுக்கு தக்க பாதுகாப்பு அளித்து அடுத்த தலைமுறையினரை நல்ல பாதையில் நடத்துவது அனைவரின் கடமையாகும் என்றார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் காவியா, கார்த்திகா மற்றும் கலந்து கொண்டனர்.

The post கறம்பக்குடி அருகே மோகனூரில் இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Home ,-Seeking Education ,Centre ,Moganur ,Karambakudi ,KANDARVAKOTTA ,Dinakaran ,
× RELATED இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆய்வு