×

திண்டுக்கல்லில் தேசிய தடகள போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு

திண்டுக்கல், நவ. 18: திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் சாதனை புரிந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட தடகள சங்க செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், எம்எஸ்பி பள்ளி தாளாளர் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் நாட்டாமை காஜா மைதீன், மாவட்ட கூடைப்பந்து கழகதலைவர் செண்பகமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார். தேசிய அளவிலான தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் மற்றும் ஹெப்டாத்லான் போட்டியில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டும் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்த ஜித்தின் அர்ஜுன், மாநில அளவில் ஹெப்டாத்லான் போட்டியில் இரண்டாம் இடமும், 100 மீட்டர் தடை போட்டியில் மூன்றாம் இடமும், தென் மண்டல போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற கயல்விழி,

மாநில அளவிலான 2000 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடமும், தென் மண்டல அளவில் ஆறாம் இடமும் பெற்ற கிஷோர், மாநில அளவில் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற ஓவியா, மாநில பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்ற திவாகரன் ஆகியோருக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்எம்பிஎம் பள்ளி தாளாளர் பரமசிவம் மற்றும் பல்வேறு விளையாட்டு சங்க தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜிடிஎன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் தேசிய தடகள போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : National Athletics Competition ,Dindigul ,District Athletic Association ,Dindigul GTN College ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் குடிமகன்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை