×

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம்

 

காரைக்கால்,நவ.18: கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். காரைக்கால் அடுத்த பச்சூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்மசாஸ்த்தா ஐயப்பன் கோயில் உள்ளது.  சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம், நெய் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. மேலும் இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் கன்னிமூல கணபதி மற்றும் மாளிகைபுரத்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
நேற்று கார்த்திகை முதல் நாள் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சபரிமலைக்கு செல்ல விரதம் மேற்கொள்ள ஐயப்ப புனித மாலை அணிந்து கொண்டனர்.

The post கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் appeared first on Dinakaran.

Tags : Ayyappan ,Karthikai ,Karaikal ,Ayyappa ,Pachur ,Karthikaran ,
× RELATED தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 14 வாகனங்கள் பறிமுதல்