×

ஆவடி அருகே சாலையில் சென்ற லாரியிலிருந்து தனியாக கழன்ற டயரால் பரபரப்பு..!!

ஆவடி: ஆவடி அருகே சாலையில் சென்ற லாரியிலிருந்து தனியாக கழன்று டயரால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரம்பத்தூரிலிருந்து குஜராத் நோக்கி கிளம்பிய லொறி ஒன்று வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரி அருகே சென்று கொண்டிருந்தது. லாரியின் இடதுபக்க டயர் ஒன்று திடீர் என தனியாக கழன்று ஓடியதால் பதற்றம் அடைந்த ஓட்டுநர் 100 மீட்டர் தொலைவில் லாரியை லபாகமாக நிறுத்தினார்.

கழன்ற உடனே அதிவேகமாக ஓடிய டயர் சாலை ஓர நடைமேடை மீது மோதி பறந்து சென்றது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் நூல் இழையில் உயிர்தப்பினர். நடைமேடையில் மோதி பறந்து சென்ற தயார் அருகில் இருந்த வாகனங்கள் மீது மோதி கீழே விழுந்தது. அங்கிருந்த கடை வாசலில் அமர்ந்திருந்தவர்களும் அலறியடித்து ஓடினர். நிகழ்விடத்திற்கு விரைந்த பட்டாபிராம் போலீசார் இது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

The post ஆவடி அருகே சாலையில் சென்ற லாரியிலிருந்து தனியாக கழன்ற டயரால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Avadi ,Sriperambatur ,Gujarat ,Dinakaran ,
× RELATED போகி பண்டிகை கொண்டாட்டத்தால்...