×

வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

சங்கராபுரம், நவ. 16: சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் மணிகண்டன். இவர் அதே கிராமத்தில் கிருஷ்ணர் கோயில் கட்டுவதற்காக அமாவாசை சீட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் உறுப்பினராக சேர்ந்த அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சங்கர் (எ) பெரியசாமி சீட்டு பணம் கட்டவில்லை என தெரிகிறது. அதை கேட்ட மணிகண்டனை சங்கரின் உறவினர்கள் அய்யாசாமி மகன் ஏழுமலை, முனுசாமி மகன் சதீஷ்குமார், பூபதி மகன் கலியமூர்த்தி ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலை(38), சதீஷ்குமார்(32), கலியமூர்த்தி(28) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெரியசாமியை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Ramu ,Manjaputtur ,Krishna ,Dinakaran ,
× RELATED துணியை காய வைத்த போது மின்சாரம் தாக்கி...