×

இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ் ஜப்தி

மேல்மலையனூர், நவ. 16: செஞ்சி நான்கு முனை சந்திப்பில் விபத்து இழப்பீடு வழங்காத இரண்டு அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா தைலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ரவி அவரது மனைவி உமாவுடன் கடந்த 2019 ஆண்டு இருசக்கர வாகனத்தில் மேல்பாப்பாம்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது மேல் பாப்பாம்பாடி ஏரிக்கரையில் அரசு பேருந்து பைக் மீது மோதியதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து நான்கு வருடம் கடந்த நிலையில் கடந்த வருடம் செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் விபத்துக்கான இழப்பிட்டு தொகை ரூ.53 லட்சத்தை வழங்க நீதிமன்ற உத்தரவிட்டும் இதுவரை போக்குவரத்து நிர்வாகம் இழப்பீட்டு தொகையை வழங்காததால் செஞ்சி சார்பு நீதிமன்ற நீதிபதி நளினிகுமார் உத்தரவிட்டதன்பேரில் நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு அரசு பேருந்துகளையும் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். திடீரென நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்துகளை ஜப்தி செய்ததால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நடத்து நருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : government ,Melmalayanur ,Senji ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் இருந்து 2வது நாளாக 82...