×

சென்னை, திருப்பதி செல்லும் ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தம்

விழுப்புரம், நவ. 16: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட விழுப்புரம்-புதுச்சேரி ரயில் வழித்தடத்தில் சின்னபாபுசமுத்திரம்-புதுச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் திருப்பதியிலிருந்து காலை 4 மணிக்கு புறப்படும் வண்டி எண் 16111 திருப்பதி-புதுச்சேரி முன்பதிவில்லா விரைவு ரயில், நவம்பர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும். இதுபோல புதுச்சேரியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06026 புதுச்சேரி-சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் நவம்பர் 16, 18 ஆகிய தேதிகளில் புதுச்சேரி-விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மாலை 4.45 மணிக்கு விழுப்புரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்டுச் செல்லும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை, திருப்பதி செல்லும் ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirupati ,Villupuram ,Southern Railway ,Trichy Division Office ,Trichy Division ,
× RELATED திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி...