- டாக்டர்
- சங்குமணி
- தமிழ்நாடு மருத்துவத் துறை
- சென்னை
- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை
- தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் சங்குமணியை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நியமித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணை: விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் சங்குமணி 2023 -2024ம் ஆண்டுக்கான மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவ கல்வி இயக்குநராக இருந்த ஆர்.சாந்திமலர் ஓய்வு பெற்றதையடுத்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ள டாக்டர் சங்குமணி, பதவி உயர்வு அடிப்படையில் மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் சங்குமணி நியமனம்: தமிழக மருத்துவத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
