×

பிரச்சனை சிஷ்டத்தில் இல்லை, கேப்டன்சியில் உள்ளது: பாபர் அசாம் மீது மாஜி வீரர் சாடல்

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் பதவி விலகக்கோரி ஏராளமான முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் சிஸ்டம் மாற்றாமல், கேப்டனை மாற்றி எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு முன்னாள் வீரர் முகமது ஆமிர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், என்னை பொறுத்தவரை கேப்டன்சி என்பது முக்கியமான ஒன்றாகும்.

பிசிபியின் அணுகுமுறை என்ன இடிக்க முடியாத சுவரா? 5 முதல் 6 நிர்வாகிகள் இணைந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை வழிநடத்தி வருகின்றனர். இதே பிசிபி சிஸ்டத்தின் கீழ் தான் 1992ல் இம்ரான் கான் உலகக்கோப்பையை வென்றார். 2009ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் இதே சிஸ்டத்தின் கீழ் தான் ஷாகித் அப்ரிடி மற்றும் சர்ஃபராஸ் அஹ்மத் வென்றனர். கடந்த 4 ஆண்டுகளாக பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த அணியை கட்டமைத்தது பாபர் அசாம் தான்.

பிரச்சனை சிஸ்டத்திலோ, நிர்வாகத்திலோ இல்லை. கேப்டன்சி என்ற அணுகுமுறையில் உள்ளது. டோனி எப்படி இந்திய கிரிக்கெட்டை மாற்றினார் என்று பாருங்கள். அவர் நிர்வாகத்திலோ, அடிப்படையிலோ எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் எத்தனை நாட்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் என்ற மக்கள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். ஆனால் இன்று உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா தான். கேப்டனின் மனநிலை மாறாமல் நிர்வாகத்தையோ சிஸ்டத்தையோ குறைகள் சொல்லி பயனில்லை என்றார்.

The post பிரச்சனை சிஷ்டத்தில் இல்லை, கேப்டன்சியில் உள்ளது: பாபர் அசாம் மீது மாஜி வீரர் சாடல் appeared first on Dinakaran.

Tags : Chatal ,Babar Assam ,Mumbai ,Pakistan ,World Cup cricket ,Babar Azam ,
× RELATED காங். தேர்தல் அறிக்கை குறித்து...