×

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டியவை..!!

* கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.

* பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து ‘துதிப்போருக்கு வல்வினை போம்’என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

* ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

* மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

* ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

* சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.

* மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.

The post வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டியவை..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…