×

வட்டார கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 2019-20 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் காலியாக இருந்த 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் 10ல் நடந்தது. அதன்படி, அன்றைய தினம் காலையில் தமிழ் தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொது பாடத்துக்கான தேர்வும் நடந்தது. பொதுப் பாடத்துக்கான தேர்வு 150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்டது. இந்நிலையில் எழுத்துத் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, தேர்வர்கள், மதிப்பெண்களை http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

The post வட்டார கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Education ,Chennai ,Teacher Selection Board ,Dinakaran ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...