×

காங்கிரசில் இளைஞர்கள் ஐக்கியம்

தூத்துக்குடி, நவ. 10: பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கணேஷ் பாபு தலைமையில் அண்ணா நகர், ராஜகோபால் நகர், பிரையண்ட் நகர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். அவர்களுக்கு முரளிதரன் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது மாவட்ட இளைஞர் காங். பொதுச் செயலாளர் மகாராஜன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ், மாவட்ட செயலாளர் குமார முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post காங்கிரசில் இளைஞர்கள் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Thoothukudi ,Tuticorin Metropolitan District Congress ,President ,Muralitharan ,Youth United ,Dinakaran ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை...