×

வரும் 13 தேதி பொது விடுமுறை முதல்வருக்கு ஆசிரியர் கூட்டணி நன்றி

 

திருப்பூர், நவ.10: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஓய்வுப்பிரிவு) பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  தீபாவளிக்கு பண்டிகைக்கு மறுநாள் (13ம் தேதி) பொது விடுமுறை அளித்துள்ளது அனைத்து தரப்பினருக்கும் பரிபூரணமாக சந்தோஷமாக உள்ளது. வெளியூர் சென்றுவரும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (ஒய்வு பிரிவு) தனது இதய பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post வரும் 13 தேதி பொது விடுமுறை முதல்வருக்கு ஆசிரியர் கூட்டணி நன்றி appeared first on Dinakaran.

Tags : Teacher's Alliance ,Tirupur ,Tamil Nadu Primary School Teachers' Alliance ,General Secretary ,Arumugam ,Diwali ,
× RELATED திருவள்ளூரில் ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்