கயத்தாறு, நவ. 9: க.குப்பணாபுரத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டினார். கயத்தாறு ஒன்றியத்திற்கு உட்பட்ட க.குப்பணாபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என வைத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தனது மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.4.50 லட்சம் ஒதுக்கீடு செய்தார். நேற்று நடந்த இதன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு திமுக கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் க.குப்பணாபுரம் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி வீரபாண்டி, துணை தலைவர் சண்முகத்தாய், செயலாளர் கருத்தப்பாண்டி, குப்பணாபுரம் திமுக கிளை செயலாளர் மாரிச்செல்வம், ராஜாபுதுக்குடி பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post க.குப்பணாபுரத்தில் பயணியர் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.