×

அமித்ஷா சென்ற பரப்புரை வாகனத்தில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற பரப்புரை வாகனத்தின் மீது மின்கம்பி உரசி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொண்டார். பிடியட் கிராமத்தில் இருந்து பர்பட்சர் பகுதியில் ரதம் போல வடிவமைக்கப்பட்ட திறந்த வாகனத்தில் அமைச்சர் அமித்ஷா பயணித்தார். குடியிருப்பு பகுதி வழியாக வாகனம் சென்ற போது சாலையின் மேலே சென்று கொண்டு இருந்த மின் கம்பி மீது வாகனம் உரசியது.

தொடர்ந்து மின்கம்பியில் தீப்பொறி ஏற்பட்டு, அமித்ஷாவின் வாகனத்தில் அறுந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமித்ஷா வாகனத்தில் பின்னால் வாகனத்தில் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இதனை உடனடியாக கவனித்து வாகனத்தை நிறுத்தினார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கவனித்ததால் விபத்தில் இருந்து அமித்ஷா தப்பினார். பின்னர் வேறு வாகனத்தில் அமித்ஷா பயணத்தை தொடர்ந்தார். இந்த நிகழ்வு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

The post அமித்ஷா சென்ற பரப்புரை வாகனத்தில் தீப்பொறி ஏற்பட்டு மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : AMITSHAH ,Jaipur ,Rajasthan ,Union Interior Minister ,Amitsha ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...