×

ஆலங்குளத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேரிகார்டுகள் டிஎஸ்பியிடம் வழங்கல்

ஆலங்குளம், நவ.8:ஆலங்குளத்தில் பிரதான சாலைகளில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி நடக்கிறது. அவற்றை தவிர்க்கும் வகையில் கார்த்திகா ஜவுளி நிறுவனம் சார்பில் காவல்துறைக்கு பேரிகார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டத்தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா தலைமை வகித்தார். பேரமைப்பின் மாவட்ட செயலாளர் வி.கணேசன், பொருளாளர் ஐ.வி.என்.கலைவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்ணபாஸ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ஆகியோரிடம் 8 பேரிகார்டுகளை ஜவுளி நிறுவன உரிமையாளர் எஸ்.எம்.டி. ரத்தினசாமி ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து ஆலங்குளம் பிரதான சாலை மற்றும் அம்பாசமுத்திரம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பேரிகார்டுகள் உடனடியாக வைக்கப்பட்டன.

The post ஆலங்குளத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேரிகார்டுகள் டிஎஸ்பியிடம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Karthika Textiles ,Dinakaran ,
× RELATED ஆலங்குளத்தில் போலீசுக்கு அரிவாள் வெட்டு