×

வாங்கய்யா வாங்க..போனா வராது..இந்த கிராமத்தில் வசித்தால் ரூ.25 லட்சம் பரிசு..ஆஃபரை அள்ளி விட்ட அரசு!!

ரோம்: இத்தாலி நாட்டில் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்க வருபவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இத்தாலியின் தென்மேற்கில் நீல கடலோரம் பழுப்பு நிற கரடு முரடான மலைப்பகுதியில் அமைந்து இருக்கும் பழமைமாறாத காலிப்ரா என்ற நகரத்திற்கு உட்பட்ட பல கிராமங்களில் மக்கள் தொகை வெகுவாக குறைந்துள்ளது.

300க்கும் மேற்பட்ட சமூகத்தினர் வசிக்கும் இந்த கிராமங்களில் கடந்த 2021ம் ஆண்டு மக்கள் தொகை நிலவரப்படி, வெறும் 5000 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் கிராமத்தின் பொருளாதாரமும் சரிந்து வருகிறது. இதனை சமாளிக்கும் பொருட்டு நகரங்களில் இருந்து குடிப்பெயர்ந்து கிராமத்தில் வசிக்க வருபவருக்கு இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு குடிப்பெயர்ந்து வருபவர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், கிராமத்தில் கைவிடப்பட்ட கடைகள் , சிறு தொழில்களை நடத்தவோ அல்லது புதிதாக தொடர முன் வர வேண்டும், 90 நாட்களுக்கு குடியேற வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் கால் விரல் என்று அழைக்கப்படும் இந்த அழகிய கிராமங்களில் 25 லட்சம் ரூபாயுடன் வசிக்க இத்தாலி நகரவாசிகள் கட்டாயம் போட்டி போடத்தான் போகிறார்கள்.

The post வாங்கய்யா வாங்க..போனா வராது..இந்த கிராமத்தில் வசித்தால் ரூ.25 லட்சம் பரிசு..ஆஃபரை அள்ளி விட்ட அரசு!! appeared first on Dinakaran.

Tags : Rome ,Italy ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது;...