×

முகாம் குறித்து அறிவிக்காததால் வேளாண் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

சிவகங்கை, நவ.7: சிவகங்கை அருகே குமாரபட்டி கிராமத்தில் இல்லம் தேடி வேளாண் வணிக சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், அது குறித்து முறையாக அறிவிக்கவில்லை என கூறி விவசாயிகள் வேளான் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் முகாமை புறக்கணித்து சென்றனர். வேளான்மைத் துறை சார்பில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை கொள்முதல் செய்து அதனை சந்தை படுத்தும் திட்டமே வீடு தேடி வேளாண் வணிக திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் இன்று சிவகங்கையை அடுத்துள்ள குமாரப்பட்டியில் இல்லம் தேடி வேளாண் வணிக சிறப்பு முகாம் உதவி வேளாண்மை அலுவலர் அபர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாம் நடைபெறுவது குறித்து இக்கிராம விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முகாமிற்கு வந்த விவசாயிகள் இந்த முகாம் நடைபெறுவது குறித்து விவசாயிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் முகாமினை புறக்கணிந்து வெளியே சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post முகாம் குறித்து அறிவிக்காததால் வேளாண் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Kumarapatti ,
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா