×

திருவனந்தபுரத்தில் 5வது சர்வதேச ஆயுர்வேத திருவிழா டிச. 1ம் தேதி தொடக்கம்

திருவனந்தபுரம், நவ. 7: திருவனந்தபுரத்தில் 5வது சர்வதேச ஆயுர்வேத திருவிழா டிசம்பர் 1ம் தேதி தொடங்குகிறது. இதில் 75 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். டிசம்பர் 1ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள கிரீன் பீல்ட் ஸ்டேடியத்தில் ஆயுர்வேத திருவிழா தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் ஆயுர்வேத டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.2500 ஆய்வு அறிக்கைகள் இந்த விழாவில் சமர்ப்பிக்கப் படுகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்தும் வரும் 200 சிறப்பு அழைப்பாளர்கள் இதில் உரையாற்றுகின்றனர்.

The post திருவனந்தபுரத்தில் 5வது சர்வதேச ஆயுர்வேத திருவிழா டிச. 1ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 5th International Ayurvedic Festival ,Thiruvananthapuram ,5th International Ayurveda Festival ,
× RELATED மது விருந்தில் ரெய்டு; ரவுடி வீட்டின்...