×

ஊட்டியில் மிதமான காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

 

ஊட்டி,மே31:ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் மழையால் மிதமான காலநிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு மாதமாக ஊட்டியை முற்றுகையிட்டு வருகின்றனர். இம்முறை துவக்கத்தில் ஊட்டியிலும் வெயில் வாட்டி வந்தது.அதே சமயம் கடந்த 10ம் தேதி துவங்கி சில நாட்கள் மழை பெய்தது. பின், கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து காணப்பட்டது.வெயிலின் தாக்கமும் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.மேலும், பகல் 12 மணிக்கு மேல் மழை பெய்தது. ஊட்டியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், தற்போது மிதமான காலநிலை நிலவுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கி தவிக்கும் சமவெளிப் பகுதி மக்கள் இந்த இதமான காலநிலையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post ஊட்டியில் மிதமான காலநிலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...