×

ஈரோட்டில் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி

 

ஈரோடு, மே 31: ஈரோட்டில் மழையினால் ஒரு வார காலமாக வெயில் தாக்கம் குறைந்திருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியதில் இருந்து ஈரோட்டில் அதிகபட்ச வெயில் நிலவி வந்தது. சராசரியாக 110 டிகிரி வெயில் நிலவி வந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

காலை 10 மணிக்கு மேல் மக்கள் வெளியே வர அச்சப்பட்டு வந்தனர். இதனால், மதிய நேரத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலை இருந்து வந்தது. இரவிலும் தாக்கம் தொடர்ந்ததால் தூக்கம் இன்றி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோடை மழை மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்தது. ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.

இதனால், மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வெயில் தாக்கமானது படிப் படியாக உயர தொடங்கி உள்ளது. மழையினால் 99 டிகிரிக்கும் கீழ் வெயில் நிலவி வந்த நிலையில் படிப் படியாக உயர்ந்து சதத்தை தாண்டி கொளுத்தி வருகின்றது. நேற்று மேலும் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மீண்டும் பழைய நிலையை எட்டிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகின்றது.

The post ஈரோட்டில் மீண்டும் வெயில் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாராய வியாபாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை