×

தஞ்சாவூரில் இன்று சட்டமன்ற பேரவை நூலக குழு களஆய்வு

 

தஞ்சாவூர், நவ.7: சட்டமன்ற பேரவை நூலகக் குழுத் தலைவர் சுதர்சனம் தலைமையிலான நூலகக் குழுவினர் இன்று தஞ்சாவூர் வருகை தருவதாக கலெக்டர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாக்கம் நூலககுழு ஆய்வுக் கூட்டம் நாளை நடைபெறுவதையொட்டி ஒருங்கிணைப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) காந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கலெக்டர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் தலைமையில் அசன் மௌலானா, கணபதி, கருணாநிதி, சம்பத்குமார், சரவணக்குமார், தியாகராஜன், மரகதம் குமரவேல், ஜெயசங்கரன், ஸ்டாலின்குமார் ஆகியோர் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (7.11.2023) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு (2023-24) கள ஆய்வு மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

 

The post தஞ்சாவூரில் இன்று சட்டமன்ற பேரவை நூலக குழு களஆய்வு appeared first on Dinakaran.

Tags : Assembly ,Library ,Committee ,Thanjavur ,Legislative Assembly Library Committee ,Sudarsanam ,Dinakaran ,
× RELATED கோவையில் மாபெரும் நூலகம், அறிவியல் மையம்: ‘முத்தமிழறிஞர் கலைஞர்‘ பெயரில்