×

சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள பழைய டயர் தொழிற்சாலையில் திடீர் கரும் புகையால் பரபரப்பு

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பழைய டயர் தொழிற்சாலையில் வால்வு பழுதானதால் திடீர் கரும்புகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொழில்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்குகிறது. இங்கு பெரும்பாலான இரும்பு உருக்காலை மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் ஏற்கனவே கருப்பு துகள்கள் வெளியேறி சுற்றி உள்ள கிராமப்புறங்களில் துகள்கள் படிந்து பல்வேறு நோய்களுக்குள்ளாகி வருவது வழக்கம் வருகிறது.

இந்நிலையில், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய டயர் அரைத்து எண்ணெய் மற்றும் கருப்பு துகள்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென கருப்பு துகள்களுடன் வெளியேறி சிப்காட் பகுதியில் எல்லாம் புகை மண்டலமாக மாறியது. இதை அறிந்த சிப்காட் தீயணைப்பு துறையினர் முத்து தலைமையில் 5 பேர் கொண்ட குழு அரை மணி நேரம் போராடி தொழிற்சாலை வெளியேறும் கருப்பு துகள்களை தண்ணீர் உடன் வாயு அடித்து அணைத்தனர்.

இது குறித்து சிப்காட் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தொழிற்சாலையில் உள்ள வால்வு பழுதானதால் அதிலிருந்து வெளியேறும் கருப்பு துகள்கள் என தெரிய வந்தது. மேலும், இது வெடித்து சிதறியிருந்தால் பெரும் உயிர் மற்றும் பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கும். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இங்கு பணிபுரிந்த 8 தொழிலாளர்களும் உயிருடன் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள பழைய டயர் தொழிற்சாலையில் திடீர் கரும் புகையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sipkot Industrial Estate ,Kummidipoondi ,Chipgat ,Sipkot Uryabpetti ,Dinakaran ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...